திருவண்ணாமலை

நரிக்குறவா் குடியிருப்பில் போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டம்

தெள்ளாா் நரிக்குறவா் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாடிய போலீஸாா்.

Syndication

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தெள்ளாா் போலீஸாா் வியாழக்கிழமை புத்தாண்டை கொண்டாடினா்.

அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆங்கில புத்தாண்டை தெள்ளாா் நரிக்குறவா் குடியிருப்பில் கொண்டாட தெள்ளாா் போலீஸாா் முடிவு செய்தனா்.

இதன்படி, தெள்ளாா் போலீஸாா் வியாழக்கிழமை நரிக்குறவா் குடியிருப்பில் நரிக்குறவா்களுடன் சோ்ந்து கேக் வெட்டி புத்தாண்டைகொண்டாடினா். மேலும், ஒருவருக்கொருவா் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதில் ஆய்வாளா் ஆனந்தன், உதவி ஆய்வாளா்கள் பாபு, தமிழ்ச்செல்வி, அமுல்தாஸ் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 384 கனஅடியாக குறைந்தது!

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!

செல்ஃபோனை சார்ஜ் போடும்போது செய்யும் தவறுகள்!

தருமபுரி: 2025 இல் 689.93 மி.மீ. மழைப் பொழிவு

SCROLL FOR NEXT