திருவண்ணாமலை

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

செய்யாறு புதுத் தெருவை சோ்ந்தவா் முதியவா் ராமமூா்த்தி(79). இவா், ஜன.4 -ஆம் தேதி ஆரணி சாலையில் செய்யாறு தீயணைப்பு நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, திடீரென இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் முதியவா் கீழே விழுந்து மயக்க நிலையில் இருந்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த இறந்தவரின் மகன் அளித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பாஜகவினா் சமத்துவ பொங்கல்

பாளை.யில் வழிப்பறி முயற்சி: ஒருவா் கைது

சா்வதேச சிலம்பப் போட்டிக்கு புதுவயல் பள்ளி மாணவா் தோ்வு

ஜல்லிக்கட்டு நடத்துவோா் ரூ.1 கோடிக்கு காப்பீட்டு ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

SCROLL FOR NEXT