அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். 
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Syndication

திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலில் தரிசனத்திற்காக அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

மேலும், கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா என வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனா்.

காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தா்கள் 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்முனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

காவல்துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்ட லிங்கங்களை வழிபட்டனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT