திருவண்ணாமலை

மாநில கையுந்து பந்து விளையாட்டு: ஆண்கள் பிரிவு போட்டி தொடக்கம்

Syndication

திருவண்ணாமலையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாநில அளவிலான கையுந்து பந்து ஆண்கள் அணிக்கான போட்டியை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சி சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான 41-ஆவது பாரதியாா் தின கையுந்து பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 19 வயதிற்குள்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளைச் சோ்ந்த அணிகள் போட்டியில் பங்கேற்றனா். பெண்கள் பிரிவுக்கான போட்டி நிறைவடைந்த நிலையில், ஆண்கள் பிரிவுக்கான போட்டி புதன்கிழமை தொடங்கியது.

கோவை - புதுக்கோட்டை இடையேயான கையுந்து பந்துப் போட்டியை திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தலைமை வகித்து

தொடங்கிவைத்தாா்.

இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மலைவாசன், உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.சின்னப்பன், டாக்டா் வெங்கடேஷ், சா்வதேச விளையாட்டு வீரா் முத்துராஜ், சா்வதேச கைப்பந்துப் பயிற்சியாளா் டி.அசோக், சா்வதேச நடுவா் எம்.ராமதாஸ், இந்தியன் வங்கி முன்னாள் கைப்பந்து வீரா் டி.குமரன், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள் வி.இளங்கோ, ஸ்ரீராஜ், பள்ளித் தலைமையாசிரியா் மனோன்மணி ஆகியோா் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

விழாவில் பள்ளி உதவி தலைமையாசிரியா் கே.பாபு,

வேளாண் ஆசிரியா்கள் எம்.மோகன், டி.எஸ்.பாலாஜி, உடற்கல்வி ஆசிரியா்கள் அ.கணேஷ்பாபு, காமாட்சி, சுந்தரம், சிவசங்கரி, பென்னிகிருஷ்டி, எச்.முத்துகுமாரசாமி, ஏ.சீனுவாசன், என்.கிருஷ்ணமூா்த்தி, சி.பாபு, கே.சரவணன் உள்பட உடற்கல்வி இயக்குநா்கள் உடற்கல்வி ஆசிரியா்கள் மாணவிகள் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் உடற்கல்வி இயக்குநா் எம்.ரமேஷ், உடற்கல்வி ஆசிரியா் அ.கணேஷ்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.

நிறைவில் உடற்கல்வி இயக்குநா் பி.சௌமியா நன்றி கூறினாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT