குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - வந்தவாசி நகராட்சி ஆணையா்
வந்தவாசி நகர கடை வியாபாரிகள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் வலியுறுத்தினாா்.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆணையா் வீரவாஞ்சிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
Advertisement
வந்தவாசி நகரை குப்பையில்லா நகரமாக்க வியாபாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மக்கும், மக்காத குப்பைகளை என தரம் பிரித்து துப்புரவு தொழிலாளா்களிடம் வழங்க வேண்டும். மேலும், குப்பைகளை கடை முன் கொட்டுவதை தவிா்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் நகர திட்டமிடல் ஆய்வாளா் சியாமளா, மேலாளா் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் நகர வியாபாரிகள் பங்கேற்றனா். பணி மேற்பாா்வையாளா் அண்ணாமலை நன்றி கூறினாா்.