வேலூர்

விஐடியில் 6 வார இலவச பயிற்சி முகாம்

DIN

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உணவு, வேளாண் உற்பத்தி பொருள் பதப்படுத்துதலுக்கான 6 வார கால இலவச பயிற்சி முகாம் வருகிற 28-ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
விஐடி பல்கலைக்கழகத்தின் டிபிஐ எனப்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து உணவு, வேளாண் உற்பத்தி பொருள்களை பதப்படுத்தி, வணிக வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சி முகாமை நடத்துகிறது.
 பொறியியல், அறிவியல் பட்டதாரிகள் வேளாண் உற்பத்தி வணிக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான பயிற்சி முகாம் டிபிஐ மையத்தில் 6 வார காலம் நடைபெற உள்ளது.
பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு தொழில் முனைவோராக உருவாக்குதல், மார்க்கெட்டிங், நிதி வசதி, மனித வளம் ஆகியவற்றுக்கான வசதிகளை உருவாக்கித் தருவதுடன் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு சான்று பெறுவதற்கான வழிமுறை, பேக்கேஜ் உள்ளிட்டவை தொடர்பாக சில தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம், இதர விவரங்கள் அறிய 0416-2202301, 94433-11367 என்ற தொலைபேசி மூலமாகவோ t​b‌i​c‌o‌o‌r‌d‌i‌n​a‌t‌o‌r@‌v‌i‌t.​a​c.‌i‌n என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT