வேலூர்

திருப்பத்தூர் சர்க்கரை ஆலையில்  அரைவை பணி தொடக்கம்

DIN

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2017-2018-ம் ஆண்டிற்கான அரைவைப் பணி தொடக்க பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, ஆலை மேலாண்மை இயக்குநர் சாந்தி தலைமை வகித்தார். ஆலைத் தலைவர் செல்வம், துணைத் தலைவர் தயாகரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சரளா, அம்சவேணி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தனபால், முல்லை, பாணக்கார சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி குத்து விளக்கேற்றி பூஜை செய்து அரைவையைத் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2017-2018-ஆம் ஆண்டின் அரைவை பருவத்தில் பதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் டன், மற்ற கரும்பு ஆலைகளிலிருந்து 10 ஆயிரம் டன் என மொத்தம் 60 ஆயிரம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கரும்பு அபிவிருத்தி அலுவலர் சிட்டிபாபு மற்றும் கரும்பு அலுவலர்கள், களப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT