வேலூர்

முருகனிடமிருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: மே 25-க்கு ஒத்திவைப்பு

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகனிடம் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (மே 25) ஒத்திவைக்கப்பட்டது.
வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகனிடமிருந்து கடந்த மார்ச் 25-ஆம் தேதி விலையுயர்ந்த செல்லிடப்பேசி, சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதித் துறை நடுவர் அலிசியா முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தனக்கு வழங்கப்பட்ட 20 பக்க குற்றப் பத்திரிகையில் நீதிமன்ற முத்திரை இல்லாததால் திரும்ப வழங்க வேண்டுமென முருகன் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மே 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT