முகப்பு
வேலூர்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பத்தூரில் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு சார்-ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: அம்பலூர் பகுதியில் உள்ள பெரிய ஏரிக் கால்வாயை தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மின்னூர் ஏரிக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உதயேந்திரம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும். காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு வனத் துறையினரால் மிகக் குறைவான நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது என்றனர்.
இதைத் தொடர்ந்து சார்-ஆட்சியர் பேசியதாவது: வனத் துறை,வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாவட்ட நிர்வாகத்துக்கு வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →