அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மயங்கிய முன்னாள் எம்எல்ஏவால் பரபரப்பு!
போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்தில் மயங்கிய முன்னாள் எம்எல்ஏ பற்றி..
போதைபொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (இன்று) அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது முன்னாள் எம்.எல்.ஏ பலராமன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்டச் செயலாளரும் முன்னால் அமைச்சருமான பா. பென்ஜமின் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர்கள் பி. வி. ரமணா (மேற்கு), மாதவரம் வி. மூர்த்தி (கிழக்கு), சிறுனியம் பலராமன் (வடக்கு), வி. அலெக்ஸாண்டர் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெயில் காரணமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வடக்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் மேடையில் திடீரென மயங்கினார்.
Advertisement
Advertisement
அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை பாதுகாப்பாகத் தூக்கிச் சென்றனர். அதைத்தொடர்ந்து ஆசுவாசப்படுத்தி காரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
A stir ensued on Tuesday (today) when former MLA Balaraman collapsed while AIADMK members were staging a protest condemning the DMK government for its failure to curb the circulation of narcotics.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.