அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அதிருப்தியாளர்கள் தெரிவித்திருப்பது பற்றி...
தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்குடன் இருப்பதைக் கண்டித்து, அதிமுக சார்பில், ஆக. 14 ஆம் தேதியில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், ராமநாதபுரத்துக்கு நத்தம் விஸ்வநாதனும், சேலத்துக்கு தங்கமணியும் பொறுப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சொந்த மாவட்டத்தை விட்டு, வேறு மாவட்டத்துக்கு பொறுப்பேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்த கட்சித் தலைமை அறிவுறுத்தியிருப்பதை ஏற்க மாட்டோம் என்று அதிமுக அதிருப்தி முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதிமுகவின் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்காததால் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
We will not participate in the AIADMK protest! S.P. Velumani and Natham Viswanathan announce.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.