வேலூர்

மாத "சீட்டு' நடத்தி மோசடி: துப்புரவு பெண் பணியாளர் கைது

DIN

ராணிப்பேட்டையில் மாத சீட்டு நடத்தி ரூ. 11.59 லட்சம் மோசடி செய்ததாக நகராட்சி துப்புரவு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை நவல்பூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வரதராஜின் மனைவி பேபி (47). இவர், நகராட்சி துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியில் மாத சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் ஏராளமானோர் உறுப்பினர்களாகச் சேர்த்து மாத சீட்டு செலுத்தி வந்துள்ளனர்.  இந்நிலையில் நவல்பூர் மசூதி தெருவைச் சேர்ந்த லட்சுமி உள்பட 7 பேருக்கு சீட்டுப் பணமான ரூ. 11.59 லட்சத்தை கடந்த 3 ஆண்டுகளாக வழங்காமல் காலம் கடத்தி வந்தாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி உள்ளிட்டோர் பேபி மீது ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேபியை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT