முகப்பு
வேலூர்

பூட்டியே கிடக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து  வைக்கப்பட்ட  பாலூட்டும் தாய்மார்களுக்கான

வேலூர்

பூட்டியே கிடக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து  வைக்கப்பட்ட  பாலூட்டும் தாய்மார்களுக்கான

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து  வைக்கப்பட்ட  பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகள் மூலம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு சிரமமின்றி பாலூட்டும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உள்பட்ட  பேருந்து  நிலையங்களில் தனி அறை திறக்கப்படும் என சட்டப் பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழக சுகாதாரத் துறை சார்பில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் இருக்கைகள், மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன அறைகள் கட்டப்பட்டன.
 கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலக தாய் பால் வாரத்தை முன்னிட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். 
இதேபோல, ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை தற்போது பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. போதிய பராமிப்பு இல்லாததால் அறை பூட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →