கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்பத்தூர் அருகே கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூர் அருகே கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி, செல்லரப்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தாமான விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கந்திலி போலீஸார் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார், கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.