முகப்பு
வேலூர்

மாங்காய்க்கு மானியம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மாங்காய்க்கு மானியம் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி,  குடியாத்தம் பகுதி  விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:54 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மாங்காய்க்கு மானியம் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி,  குடியாத்தம் பகுதி  விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் பகுதியில் மாங்காய் மகசூல் அதிகரித்ததையடுத்து, மாங்காய், மாம்பழங்களின் விலை வீழ்ச்சி  அடைந்தது. 
இதனால் மாங்காய் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாங்காய்களை ஆந்திர மாநிலத்தில் கொண்டு சென்று விற்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சி. ஜெகந்நாதன்  தலைமையில் மாங்காய் விவசாயிகள் குடியாத்தம்  சித்தூர்கேட்டில்  மாங்காய்களை  சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநில அரசு வழங்குவது போல் மாங்காய்க்கு டன்னுக்கு ரூ. 2,500 மானியம் வழங்கக் கோருவது, குடியாத்தம் பகுதியில் மாங்காய்ச் சந்தை அமைத்து, அரசே மாங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.