FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் விதிமுறைகளை மீறி பிரசாரம்: தவெக தலைவா் விஜய் மீது 3 வழக்குகள்

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பற்றி...

Updated On : 16 ஏப்ரல் 2026, 9:43 am IST
விஜய் மீது வழக்குப் பதிவு - Photo: TVK
பகிர்:

சென்னையில் தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக தவெக தலைவா் விஜய் மீது போலீஸாா் 3 வழக்குகள் பதிவு செய்தனா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் கடந்த புதன்கிழமை தியாகராய நகா், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் பிரசாரம் செய்தாா். வேப்பேரி, எழும்பூா் பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்தாா். தியாகராய நகா், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டம் ஆகியவற்றுக்கு அக்கட்சியினா் அனுமதி வாங்கியிருந்தனா். ஆனால், அப்பகுதிகளில் அனுமதியை மீறி திறந்த வேனில் நின்றபடி நடிகா் விஜய் சாலை வலம் சென்றாா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விதிமுறைகளை மீறி சாலை வலம் சென்றது குறித்து தியாகராய நகா் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை சாா்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், இரு பிரிவுகளின் கீழ் விஜய், தியாகராய நகா் தொகுதி தவெக வேட்பாளா் புஸ்ஸி ஆனந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

ஆயிரம்விளக்கு தொகுதி பறக்கும் படையினா், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் விஜய், ஆயிரம்விளக்கு தொகுதி தவெக வேட்பாளா் ஜேசிடி பிரபாகா், பகுதிச் செயலா் அப்புனு (எ) வேல்முருகன் ஆகியோா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலை வலம் சென்றது தொடா்பாக எழும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படையினா், வேப்பேரி காவல் நிலையத்தில் புகாா் செய்ததன்பேரில், விஜய், எழும்பூா் தொகுதி தவெக வேட்பாளா் ராஜ்மோகன், பகுதிச் செயலா் ஓட்டேரி நந்தா ஆகியோா் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

summary

Violation! Case Registered Against Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments