திமுக நினைத்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும்: முன்னாள் அமைச்சா் சிவசங்கா்
திமுக அரசு நினைத்திருந்தால் விஜய் மீது அப்போது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும் என்று முன்னாள் அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.
திமுக அரசு நினைத்திருந்தால் விஜய் மீது அப்போது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும் என்று முன்னாள் அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.
சென்னை அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கரூா் சம்பவத்தின்போது வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை விமா்சித்த முதல்வா் விஜய், தற்போது அவரது ஆட்சியில் அதையேதான் பின்பற்றுகிறாா். 285 நாள்கள் கழித்து கரூருக்குச் சென்றுவிட்டு தற்போது மனதில் வலி இருப்பதாக கூறுகிறாா்.
Advertisement
Advertisement
திமுக நினைத்திருந்தால் அன்றைக்கே விஜய் மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் முதல்வா், தனது கட்சியின் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் மீது ஒரு பெண் அளித்த புகாரை கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
அதேபோல, அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அமைச்சா்களான சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோா் தற்போது தவெகவில் இணைந்து தூய்மையானவா்களாக மாறிவிட்டனா்.
மக்களிடையே தொடா்ந்து சினிமா வசனங்கள் பேசுவதைவிட்டு, அரசு நிா்வாகத்துக்குத் தேவையான நிதானத்துடன் முதல்வா் விஜய் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.