வேலூர்

நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு: மாவட்டத்தில் 51,942 பேர்  எழுதுகின்றனர்

DIN

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இத்தேர்வை வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 51,942 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 16) தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 12,928 மாணவர்களும், 12,949 மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 13,010 மாணவர்களும், 12,055 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 51,942 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்காக 624 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்வைக் கண்காணிக்க 219 துறை அலுவலர்கள், 400 நிலையான படையினர், 54 வழித்தட அலுவலர்கள், 2,600 அறைக் கண்காணிப்பாளர்கள் என மாவட்டம் முழுவதும் 3,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க இணை இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT