வேலூர்

தனியார் சார்பில் தூய்மைப் பணி

DIN

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் தூய்மைப் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட  மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் வரை சாலையோரப் பகுதியில் தனியார் நிறுவனம் ஆலா குளோன்ஸ், பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து, 23 மரக்கன்றுகளை நட்டன. 
மேலும் பேரூராட்சி பணியாளர்கள் சாலையோரம் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், செயல் அலுவலர் விஜயா தலைமை வகித்து மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் ஆலாகுளோன்ஸ் மேலாளர் சாதாப், வி.ஏ.எஸ். நூருல்லா தொழிற்சாலை மேலாளர் ஷகீல், உதயேந்திரம் மஜீத் முத்தவல்லியும், சேவைக் குழுத் தலைவருமான சான் பாஷா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT