சாலையை சீரமைக்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ஆற்காட்டை அடுத்த திமிரியில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆற்காட்டை அடுத்த திமிரியில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திமிரி பேரூராட்சி 9-ஆவது வார்டுக்குள்பட்டது அருந்ததி பாளையம். இப்பகுதியில் உள்ள மண் சாலையானது சேறும், சகதியுமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சாலையின் வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பேரூராட்சி அதிகாரிகளிடம் மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.