வேலூர்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஆற்காடு அருகே மேலப்பழந்தை கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்  ஈடுபட்டனர்.
மேலப்பழந்தை கிராமத்தில் கடந்த சில  நாள்களாக  குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் கலவையில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து, ஆற்காடு வட்டாட்சியர் சுமதி மற்றும்ள் போலீஸார் அங்கு சென்று குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 
2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT