வேலூர்

வாணியம்பாடியில் வாக்கு சேகரித்த அமைச்சர்

வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மாநில

DIN

வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். 
வாணியம்பாடியில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக பேருந்து நிலையம், காதர்பேட்டை, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தனர். 
பேரணியின்போது அமைச்சர் நிலோபர் கபீல், வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர்.  அதிமுக நகரச் செயலர் சதாசிவம், அவைத் தலைவர் சுபான், மாவட்டப் பிரதிநிதி பிரகாசம், ஒன்றிய பேரவைச் செயலர் சதீஷ், தேமுதிக, பாமக, பாஜக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT