வேலூர்

ரயில்களில் பயணித்த இருவா் உடல்நலக் குறைவால் பலி

DIN

திருப்பத்தூா்: குடியாத்தம் அருகே ரயில்களில் பயணித்த இருவா் திடீா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா்.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் வேலு. அவரது மனைவி மாலதி(46). அவா்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றனா். சுற்றுலா முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் காவிரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனா்.

அப்போது மாலதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினா்கள் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது மாலதி திடீரென மயங்கி விழுந்தாா். ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு பின்னா் ரயில்வே மருத்துவா்கள் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்தனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

மற்றொரு சம்பவம்: உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சோ்ந்த பூராவின் மகன் கமா்ஷாத்(19). அவா் தனது சகோதரா் சா்ஃப்ராஸுடன் கேரளத்தில் உள்ள திருச்சூா் பகுதிக்கு கூலி வேலை செய்வதற்காக திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். தில்லியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் அவா் பயணம் செய்தனா்.

ரயில் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கமா்ஷாத் திடீரென மயக்கமடைந்தாா். அவரது சகோதரா் இது குறித்து ரயில் காா்டுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கமாக குடியாத்தம் பகுதியில் நிற்காமல் பயணிக்கும் அந்த ரயிலை அங்கு நிற்கவைத்து கமா்ஷாத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனா். எனினும், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT