வேலூர்

ஆம்பூர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

DIN

ஆம்பூரில் உள்ள ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
 ஆம்பூர் ஓ.வி. ரோடு பகுதியில் ஆங்காங் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் என்ற பிரபல ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு அருகே அவர்களுக்கு மேலும் இரு ஜவுளிக்கடைகள் உள்ளன.  திங்கள்கிழமை காலை சென்னை மற்றும் வேலூரிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேர் 3 கார்களில் ஆம்பூர்
 வந்தனர். 
ஆம்பூரில் ஆங்காங் ஜவுளி கடைகளுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் கடைகளின் கதவுகளை மூடிவிட்டனர். அப்போது, உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அதே போல பணியாளர்கள் சிலரை வெளியில் அனுப்பவில்லை. இரவு வரை வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். 
ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆம்பூர் பகுதியில் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பவர்களின் பட்டியலை வருமான வரித் துறையினர் தயாரித்து அவர்களின் கணக்கு நடவடிக்கை மற்றும் பண பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணித்து அது தொடர்பான ஆவணங்களை சேகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT