வேலூர்

சொத்துவரி உயர்வு: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

DIN

வேலூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் டீக்காராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். 
இதில், வேலூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும், கால்வாயை தூய்மைப்படுத்த பணியாளர்களை நியமிக்க வேண்டும், வார்டுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு மின்மோட்டார்களை பழுது நீக்க வேண்டும், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குப்பை வரி ஆகியவற்றை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில் கட்சியின் மாநகர் மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT