ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினர் கொண்டாட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு நல உதவிகள், இனிப்பு வழங்கியும், அன்னதானம் செய்தும் கொண்டாடினர்.
ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, கட்சியின் மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் டி.கே.முருகேசன் முன்னிலை வகித்தார்.
பார்வையற்றோர் பள்ளி, வேலப்பாடி முதியோர் இல்லம், சாய்நாதபுரம் அன்பு இல்லம், சத்துவாச்சாரி, வள்ளலார், ஆஞ்சநேயர் கோயில், ஆர்.டி.ஓ. அலுவலக சாலை என 16 இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள், முதியோர்கள், மாணவ, மாணவியருக்கு நல உதவிகள், உணவுப் பொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அன்னதானமும் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகளில், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் அண்ணாமலை, வழக்குரைஞர் பிரிவு செயலர் கே.பாலச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் சதீஷ்குமார், மாவட்ட மகளிரணி இணைச்செயலர் முனியம்மா, பகுதி செயலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி தொகுதி அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், நகரச் செயலர் சதாசிவம், நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலர் ராஜா, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நகரச் செயலர் சதாசிவம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கனார். வாணியம்பாடி சி.எல்.சாலையில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கோபால், ஜிஎஸ்கே.செந்தில் ஆகியோர் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அம்பூர் பேட்டையில் நகரப் பொருளாளர் தன்ராஜ் தலைமையில், பொதுமக்களுக்கு நகரச் செயலாளர் சதாசிவம் இனிப்பு, உணவு வழங்கினார். ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி செயலர் பாண்டியன் தலைமையில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் சிவகுமார், தபரேஷ், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் நகர அதிமுக சார்பில், கட்சியின் செயலர் ஜே.கே.என். பழனி தலைமையில் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். வழக்குரைஞர் ஆர்.கோவிந்தசாமி, நிர்வாகிகள் ஆர்.மூர்த்தி, எஸ்.என்.சுந்தரேசன், அமுதாசிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 36 வார்டுகளிலும் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஒன்றிய அதிமுக சார்பில் எம்எல்ஏ ஜி. லோகநாதன், ஒன்றியச் செயலர் வி. ராமு ஆகியோர் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். கட்சி நிர்வாகிகள் செ.கு.வெங்கடேசன், எஸ்.கோதண்டன், சி.பெருமாள், எம்.சேட்டு, எம்.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவர்
டி.அக்பர் ஷெரீப் தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெசவாளர் சங்கத்தில்...
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள கணபதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்க அலுவலகத்தில், ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.
சங்கத் தலைவர் ஜி.கோபி, துணைத் தலைவர் பி.சி. முருகானந்தம், செயலர் ஜீவானந்தம், இயக்குநர் எல்.அன்பழகன், ஆர்.மூர்த்தி, ஆர்.கே. மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகர அதிமுக சார்பில், நகரின் 36 வார்டுகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, நகர அதிமுக செயலர் கே.பாண்டுரங்கன் தலைமை வகித்தார். எம்எல்ஏ சு.ரவி, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆடைகள் வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாநில மருத்துவரணி துணைச் செயலர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர்கள் பாசறை துணைத்தலைவர் ஷியாம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகர அதிமுக நிர்வாகிகள் காமராஜ், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரக்கோணம் நகர அமமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர அமமுக செயலர் எஸ்.கண்ணதாசன் தலைமை வகித்து, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, அன்னதானம் செய்யப்பட்டது. கட்சி நிர்வாகிகள் யோகானந்த், துளசிராமன், அருணாசலம், சாந்தகுமார் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின்உருவப் படத்துக்கு, நகரச் செயலர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்றியச் செயலர் தாஜ்புரா எம்.குட்டி தலைமையில், ஆரணி சாலையில் கட்சியின் அலுவலக வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
ஆற்காடு வேலூர் சாலையில் மாவட்ட எம்.ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் ஏ.வி.சாரதி தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டது. ஆற்காடு தாஜ்புரா இணைப்புச் சாலையில், பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன் தலைமை வகித்து, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
ஆம்பூரில்...
ஆம்பூரில், நகர அதிமுக செயலர் எம்.மதியழகன் தலைமையில், ஆம்பூர் ஐஇஎல்சி காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிர்வாகிகள் ஸ்டாலின், தினேஷ், ராமகிருஷ்ணன், சீனிவாசன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.