ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் 17 விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 18 வரிசையை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதனால் ஐபோன் 18, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
புதிய ஐபோனில் எந்தெந்த சிறப்பம்சங்கள் கூடுதலாக இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு பயனர்களிடையே அதிகரித்துவரும் நிலையில், ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் வண்ணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த இரு ஸ்மார்ட்போன்களும் செர்ரி சிவப்பு நிறத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பக்கவாட்டில் சிவப்பு வைன் நிறம் இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அதாவது, ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் வெளியான ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றாக இவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஐபோன் 18 ப்ரோ வரிசை ஸ்மார்ட்போன்கள் கரும் சாம்பல், இள நீலம், அடர் செர்ரி நிறம் என மூன்று வண்ணங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஐபோன் 18 வெளியாவதற்கு முன்னரே அது குறித்த பேச்சுவார்த்தைகள் பயனர்களிடையே அதிகரித்து வருகிறது. பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபோன் 18ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
iPhone 18 Pro and iPhone 18 Pro Max have revealed new colour variants
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.