முகப்பு
வணிகம்

ஜியோவின் அடுத்த அதிரடி! ரூ.55ல் டிவி ப்ரோ பேக்! அட்டகாசமான ஆஃபர்!

ஜியோவின் அடுத்த அதிரடியாக ரூ.55ல் டிவி ப்ரோ பேக் வந்திருக்கிறது, அட்டகாசமான ஆஃபரில்

Updated On : 9 ஜூலை 2026, 2:56 pm IST
ரிலையன்ஸ் ஜியோ - ANI
பகிர்:

வீட்டில் வைஃபை கனெக்ஷன் மட்டும் வைத்துக் கொண்டு அதே வேளையில் தங்களது ஸ்மார்ட்போன்களில், வழக்கமான டிவி சேனல்களைப் பார்க்க விரும்புவோருக்காகவே, அதிரடியான பேக் ஒன்றை அறிவித்திருக்கிறது ஜியோ.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு புதிய மற்றும் மிகவும் விலை குறைந்த தொலைக்காட்சி பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் பெயர் ஜியோ டிவி ப்ரோ.

இதனைப் பெற செல்போனில், ஜியோடிவி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த செயலியில் ரூ.55க்கு ஜியோ டிவி பேக்கை ரீஜார்ஜ் செய்துகொண்டால், 30 நாள்களுக்கு தற்போது ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க்க முடியும்.16 மொழிகளில், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க முடியுமாம்.

Advertisement

Advertisement

இந்த வசதி, ஜியோ ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் நுகர்வோர்களுக்குக் கிடைக்கிறது. சன் டிவி நெட்வொர்க் சேனல்கள், சோனி என்டர்டெயின்மென்ட், ஜியோ ஸ்டார் என பல சோனல்களைப் பார்க்கலாம்.

அடிக்கடி வெளியூர் செல்வோர், பயணம் செய்வோர் போன்றவர்கள் டிவி சேனல்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் இந்த வசதி வந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments