7 அங்குல திரையுடன் வெளியாகும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்!
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் திரை முந்தைய ஐபோன்களை காட்டிலும் பெரிதாக இருக்கும் என்றும் பக்கவாட்டி பேஸில்ஸ் மெல்லியதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் 18 முன்பக்கத்தில் இதுவரை இல்லாத வகையிலான மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. திரை பெரிதாக இருந்தாலும், முந்தைய ஐபோன்களை விடவும் வடிவம், எடை 25 முதல் 35 சதவிகிதம் குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பெரிய திரை
ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.4 அங்குல திரையுடன் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் திரையின் அளவு 7 அங்குலத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் ஐபோன் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் திரை பெரியதாக இருக்கும்.
சமீபத்தில் வெளியான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் திரை 6.9 அங்குலமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐபோன் 17 ப்ரோ திரையின் அளவு 6.3 அங்குலமாக உள்ளது.
திரையை அகலப்படுத்தாமல், அதிக திரைப் பயன்பாட்டிற்காக உயரத்தை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது சமூக வலைதளத்தில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் குறித்த தகவல்கள் வெளியானாலும், அவை உறுதிப்படுத்தப்படாதது என்பதால், வெளியாகும்போது மாறுதல்களுக்கும் வாய்ப்புள்ளது.
iPhone 18 Pro Max may get nearly 7-inch display, leaked accessories suggest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.