FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மடிக்கக்கூடிய ஐபோனில் ஃபேஸ் ஐடி இல்லை? தவறவிடப்படும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஆப்பிள் நிறுவனத்தில் முதல்முறையாக வெளியாகவுள்ள மடிக்கக்கூடிய (ஃபோல்டபிள்) ஐபோனில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து...

7 செப்டம்பர் 2026, 6:27 pm IST
மடிக்கக்கூடிய ஐபோன் - படம் / நன்றி - ஆப்பிள்
பகிர்:

ஆப்பிள் நிறுவனத்தில் முதல்முறையாக மடிக்கக்கூடிய (ஃபோல்டபிள்) ஐபோன் வெளியாகவுள்ளது.

ஐபோன் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் வெளியாகும் நாளில் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சார்பில் செப். 9 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுடன் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆப்பிள் நிறுவனத்தில் முதல்முறையாக மடிக்கக்கூடிய ஐபோன் வெளியாகவுள்ளதால், அதன் பயன்பாட்டில் சிரமத்தைக் குறைக்கும் பணிகளில் ஆப்பிள் கவனம் செலுத்தியுள்ளது.

ஃபேஸ் ஐடி

குறிப்பாக மிகவும் மெலிதான தோற்றத்தை எட்டுவதற்காக சில அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது முக அடையாளம் தவிர்ப்பு.

மடிக்கக் கூடிய ஐபோன் 4.5 மி.மீ. அளவுக்கு மெல்லியதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், முக அங்கீகார அம்சத்துக்குத் தேவையான ட்ரூத் டெப்த் தேவை குறைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் விரல்ரேகைப் பதிவு அம்சம் வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் பாரம்பரியமாக தொடுதிரையிலேயே விரல்ரேகைப் பதிவு இருக்கும். ஆனால் இம்முறை பக்கவாட்டிற்கு அது மாற்றப்பட்டுள்ளது.

டெலிபோட்டோ கேமரா

கேமரா பிரிவிலும் மடிக்கக்கூடிய ஐபோன் சில மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். இரண்டு பின்பக்க கேமராக்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா. 48 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சார் இருக்கும்.

இதன்மூலம் டெலிபோட்டோ லென்ஸ் இருக்காது எனத் தெரிகிறது. மெல்லிய தோற்றத்தை எட்டுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடுதிரை

மடிக்கக் கூடிய ஐபோனில் தொடுதிரையிலும் மாற்றங்கள் இருக்கலாம். வெளிப்புறம் 5.5 அங்குல தொடுதிரை இருக்கலாம் என்றும் உள்புறம் 7.8 அங்குல திரை இருக்கலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஐபோன்களில் மேல்பக்கம் இருக்கும் பட்டன், மடிக்கக்கூடிய ஐபோனில் பக்கவாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது.

summary

Apple's First Foldable iPhone Could Miss These Key Features

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments