இணையக் கைகள்...
இணைய உலகில் ஏ.ஐ. நிறுவனங்களுக்கான போட்டியால் பயனர்களுக்கே அதிக வசதிகள் கிடைத்து வருகின்றன.
டி.என்.கே.
இணைய உலகில் ஏ.ஐ. நிறுவனங்களுக்கான போட்டியால் பயனர்களுக்கே அதிக வசதிகள் கிடைத்து வருகின்றன.
மாணவர்களுக்கு கற்றல், ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் பகுப்பாய்வு, இசை ஆர்வலர்களுக்குப் பாடல் உருவாக்கம், யூடியூப் படைப்பாளர்களுக்கு தம்ப்நெயில் உள்ளிட்ட உள்ளடக்கக் கருவிகள், புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏ.ஐ. எடிட்டிங், சமூக ஊடகப் பயனர்களுக்கோ புதிய படைப்பாற்றல் வசதிகள், இளம் பயனர்களுக்குப் பாதுகாப்பான ஏ.ஐ. அனுபவம் என ஏ.ஐ. பயன்பாடு பல திசைகளில் விரிவடைந்து வருகிறது.
Advertisement
Advertisement
ஏ.ஐ. அளிக்கும் தகவல்கள், உருவாக்கப்படும் படங்கள், காணொலிகள், இசை போன்றவற்றை அப்படியே உண்மை என ஏற்றுக்கொள்ளாமல் சரிபார்ப்பது அவசியம். குறிப்பாக, கல்வி, செய்தி, மருத்துவம், சட்டம், பணம் போன்ற துறைகளில் சரிபார்ப்புத் தன்மை மிகவும் அவசியமானது. இவற்றில் தனிப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள், பிற தனியுரிமைத் தகவல்களைப் பகிர்வதற்கு முன் சம்பந்தப்பட்ட செயலியின் தனியுரிமை விதிமுறைகளையும் கவனிக்கவேண்டும்.
இந்தியக் கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி, கூகுள் அளித்த கூகுள் ஏ.ஐ. ப்ரோ மாணவர் சலுகையின்படி, ஓராண்டுக்கு சேவையை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெமினியின் ஏ.ஐ. திறன், ஆராய்ச்சி, நோட்புக் எல்.எம்., ஜெமினி லைவ் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தில் 2 ஜிபி சேமிப்பு அளிக்கப்படுகிறது. ஜே.இ.இ. மெயின் பயிற்சித் தேர்வுகள், தனிப்
பயனாக்கப்பட்ட கற்றல் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கூகுள் ஜெமினியின் படைப்பாற்றல் வசதிகளில் லைரா 3 மூலம் உரை, புகைப்படம் அல்லது காணொலியை அடிப்படையாகக் கொண்டு இசையை உருவாக்க முடியும். தொடக்கத்தில் 30 விநாடி இசைத்தடங்களை உருவாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், லைரா 3 ப்ரோ மூலம் சுமார் 3 நிமிடங்கள் வரையிலான நீளமான பாடல்களையும் உருவாக்க முடியும். 2026 ஜூலை மாதத்தில் புதிய லைரா 3.5-இல் ப்ளோ மியூஸில் தளத்தில் அறி
முகப்படுத்தியது. இதில் பாடலின் இசைத் தரம், வரிகள், குரல் வெளிப்பாடு, படைப்பாளரின் கட்டுப்பாடு ஆகியன மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஜெமினியை கூகுள் போட்டோஸில் இணைத்து குறிப்பிட்ட புகைப்படங்கள், காணொலிகளைத் தேடும் வசதி தற்போது உள்ளது. அந்தப் புகைப்படத்தையே ஏ.ஐ.-யில் பதிவேற்றம் செய்து , 'ஹெல்ப் மீ எடிட்' என்ற வசதியின் மூலம் நிகழ்காலத்துக்கேற்ப மாற்றங்களைச் செய்யமுடியும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த வசதி உள்ளன.
நீண்ட ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்கள், தகவல்களைப் படிப்பதற்குப் பதிலாக, அவற்றை ஏ.ஐ. உதவியுடன் ஒலி வடிவில் புரிந்துகொள்ளும் வசதிகள் வளர்ந்து வருகின்றன. கூகுள் நோட்புக் எல்.எம். உள்ளிட்ட ஏ.ஐ. கருவிகள் பயனரின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, 'ஆடியோ ஓவர்வியூ' போன்ற உரையாடல் பாணியிலான ஒலி சுருக்கங்களை உருவாக்க உதவுகின்றன.
யூடியூப் படைப்பாளர்களுக்குப் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'அஸ்க் ஸ்டூடியோ' வாயிலாக நீண்ட காணொலிகளுக்கான மேம்பட்ட வசதிகளை ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கி, அதன் நிறம், அமைப்பு உள்ளிட்ட அம்சங்களையும் உரையாடலில் மாற்றமுடியும். 'யூ டியூப் பங்குதாரர் ப்ரோகிராம்' வழியில், சிறிய காணொலிகளை படைப்பாளர்கள் தனிப்பயனுடைய வசதியில் பதிவேற்ற முடியும்.
ஏ.ஐ.யில் உருவாக்கப்பட்ட அல்லது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றப்பட்ட
உள்ளடக்கங்களுக்கு 'யூ டியூப்' வெளிப்படையான ஏ.ஐ. அடையாளங்களை வழங்கும் முறையை மேம்படுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப்பில் உள்ள புகைப்படத்தை 9:16 ஆக ஏ.ஐ.யில் விரிவுபடுத்தலாம். ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்ஆப்பின் புதிய பதிப்பில், மேட்டா ஏ.ஐ. உதவியுடன் ஒரு புகைப்படத்தை 9:16 செங்குத்து வடிவத்துக்கு விரிவுபடுத்தும் வசதி கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு சதுர அல்லது அகலமான புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பயன்படுத்தும்போது, புகைப்படத்தை வெட்ட வேண்டிய நிலை ஏற்படலாம். தற்போது அசல் புகைப்படத்தின் ஓரங்களை ஏ.ஐ.யில் பகுப்பாய்வு செய்து, புதிய காட்சிகளை உருவாக்கி, அசல் காட்சியை வெட்டாமல் முழுத்திரை வடிவில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த வசதியானது பொதுப் பயனர்களுக்கு இன்னும் வெளியிடப்படவில்லை.
டெலிகிராமில் '.கிராம்' என்ற புதிய இணைய முகவரி குறித்த தகவலும் தற்போது இணையத்தில் பேசப்படுகிறது. அந்த நிறுவனம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்கின்றனர். இதன் மூலம் டெலிகிராம் பயனர்களின் பெயர்களுடன் தொடர்புடைய தனிப்பட்ட இணையப் பக்கங்கள் உருவாக்கும் திட்டம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெமினி, கூகுள் போட்டோஸ், யூடியூப், ஜி.மெயில் போன்ற சேவைகளுடன் ஒருங்கிணைந்து தனிப்பட்ட ஏ.ஐ. உதவியாளராக ஜெமினி உருவாகி வருகிறது. இந்தியாவில் 'கூகுள் ஜெமினி ஸ்பார்க்' என்ற ஏ.ஐ. முகவரை கூகுள் ஏ.ஐ. ப்ரோ பயனர்களுக்கு அளித்துவருகிறது. இது ஜி.மெயில், ஆவணங்கள் உள்ளிட்ட எண்மப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.