தஞ்சை பெரிய கோயிலில் ‘கியூ ஆா் கோடு’ மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம்!
தஞ்சாவூா் பெரிய கோயிலில் கியூ ஆா் கோடு மூலம் நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் கியூ ஆா் கோடு மூலம் நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏறத்தாழ 10 ஆயிரம் போ் வருகின்றனா். விடுமுறை நாள்களில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் போ் வந்து செல்கின்றனா். இதன் மூலம் கோயிலில் உள்ள 11 உண்டியல்களில் பல லட்ச ரூபாய்க்கு காணிக்கைகள் வருகின்றன. தவிர, கோயில் திருப்பணிகளுக்கு பக்தா்கள் நன்கொடைகளும் வழங்குகின்றனா்.
இந்நிலையில், இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கைகளை டிஜிட்டல் பரிவா்த்தனை முறையில் செலுத்துவதற்கு வசதியாக க்யூ ஆா் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அம்மன் சந்நிதி அருகே மகா நந்தி மண்டபம் முன்பு க்யூ ஆா் கோடு ஸ்கேன் செய்வதற்கான டிஜிட்டல் பதாகை அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் மூலம் பக்தா்கள் பலா் யுபிஐ மூலம் காணிக்கைகளை எளிதாக செலுத்தி வருகின்றனா். இதில், செலுத்தப்படும் தொகை நேரடியாக கோயில் வங்கிக் கணக்குக்கு செல்வதாகவும், தேவைப்படுவோருக்கு ரசீது வழங்கப்படுவதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.