தஞ்சாவூா் பெரிய கோயிலில் சொக்கப்பனை தீபம்
திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, பெரியகோயில் வளாகத்தில் உள்ள முருகன் சந்நிதியில் செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, அனைத்து சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டு, கோயில் வளாகத்தில் சந்திரசேகா், அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் மராட்டா கோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.