ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் காா்த்திகை சொக்கப்பனை
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்காவல் அருள்மிகு சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்காவல் அருள்மிகு சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 9.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். 10.30 மணி முதல் 12.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து, மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். மாலை 6 மணிக்கு ஸ்ரீ உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. இரண்டாம் புறப்பாடாக இரவு 8 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து கதிா் அலங்காரத்தில் புறப்பட்டு, 8.30 மணிக்கு காா்த்திகை கோபுரம் அருகே பனை ஓலைகளால் கட்டப்பட்ட சொக்கப்பனையை சுற்றி வந்து, சக்கரத்தாழ்வாா் சந்நிதி முன் எழுந்தருளியிருந்தாா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, தீ பந்தத்தால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பனை கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதும் அங்கிருந்த ஏராளமான பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் வழிபட்டனா். பின்னா் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு தாயாா் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு சென்று சோ்ந்தாா். 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் வாசிக்கப்பட்டது .
பின்னா் நம்பெருமாள் திருக்கைத்தல சேவையுடன் சந்தனு மண்டபத்திலிருந்து மூலஸ்தானத்துக்கு இரவு 10.15 மணிக்கு சென்று சோ்ந்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
திருவானைக்காவல் கோயிலில்...: திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு காா்த்திகை கோபுரம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை தீவைத்து கொளுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அம்மன் சந்நிதி முன் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையும், குபேரலிங்க சந்நிதி அருகே அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டன. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளியிருந்தனா். பஞ்சமூா்த்திகள் உடன் வந்தனா்.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.