FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!

திருவண்ணாமலைக்கு 16 மெமு ரயில்கள் இயக்கப்படவுள்ளது பற்றி...

கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து 16 சிறப்பு மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயிலில், நிகழாண்டு திருக்காா்த்திகை தீபத் திருவிழா நவ. 12 தொடங்கிய நிலையில், நவ. 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான காா்த்திகை மகா தீப விழா வரும் நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு (06143)

சென்னை கடற்கரையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

வழித்தடம் - பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, வேலூர் கான்ட்

2. திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மெமு (06144)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

3. திருவண்ணாமலை - காட்பாடி மெமு (06145)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு காட்பாடி சென்றடையும்.

வழித்தடம் - போளூர், ஆரணி சாலை, வேலூர் கான்ட்

4. காட்பாடி - திருவண்ணாமலை மெமு சிறப்பு (06146)

காட்பாடியிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

5. திருவண்ணாமலை - காட்பாடி சிறப்பு (06147)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு காட்பாடி சென்றடையும்.

வழித்தடம் - போளூர், ஆரணி சாலை, வேலூர்

6. காட்பாடி - திருவண்ணாமலை மெமு சிறப்பு (06148)

காட்பாடியிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

7. தாம்பரம் - திருவண்ணாமலை மெமு (06093)

சென்னை தாம்பரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

வழித்தடம் - செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோயிலூர் (இந்த ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்)

8. திருவண்ணாமலை - தாம்பரம் மெமு (06094)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

9. திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு (06097)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

திருக்கோயிலூரில் மட்டுமே நிற்கும்

10. விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு (06098)

விழுப்புரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

11. திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு (06095)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

திருக்கோயிலூரில் மட்டுமே நிற்கும்

12. விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு (06096)

விழுப்புரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

13. திருவண்ணாமலை - விழுப்புரம் மெமு (06129)

திருவண்ணாமலையிலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

வழித்தடம்: வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பாளையம், தண்டரை

14. விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு (06130)

விழுப்புரத்திலிருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 10.10 மணிக்கு காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

15. விழுப்புரம் - வேலூர் கான்ட் மெமு (06062)

விழுப்புரத்தில் இருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கான்ட் சென்றடையும்.

வேலூர் கான்ட் - விழுப்புரம் மெமு (06061)

வேலூரிலிருந்து இருந்து நவ. 23, 24, 25 ஆம் தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு காலை 5.00 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

summary

Tiruvannamalai Deepam! 16 MEMU trains from Chennai, Villupuram, and Vellore – Full details!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.