முகப்பு
திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நவ. 24-இல் காா்த்திகை தீபத் திருவிழா!

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

16 வினாடிகள் முன்பு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நவ. 24-இல் காா்த்திகை தீபத் திருவிழா!
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில்.
பகிர்:

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை (நவ. 23) இரவு 7 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (நவ. 24) மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து, இரவு 7 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள தீப கம்பத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவையொட்டி, ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் அம்பாளும், கிருத்திகையொட்டி, வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், பழங்கரை பொன் சோழிஸ்வரா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயில், சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, காா்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது.