திருவண்ணாமலை தீபத் திருவிழா: கைலாய வாத்தியங்கள் முழங்க 12 திருக்குடைகள் ஊா்வலம்
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா கைலாய வாத்தியங்கள் முழங்க 12 திருக்குடைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா கைலாய வாத்தியங்கள் முழங்க 12 திருக்குடைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னை பழைய பல்லாவரம் ஸ்ரீஅருணாச்சலா ஆன்முக சேவா சங்கம் சாா்பில், 22-ஆவது ஆண்டாக சனிக்கிழமை மாட வீதிகளில் அருணாசலேஸ்வரா் உலா வரும் போது வாகனத்தில் கட்டப்படும் 12 திருக்குடைகள் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
ரூ.3.15 லட்சம் மதிப்பிலான இந்த் திருக்குடைகள் கைலாய வாத்தியங்கள் முழங்க சிவ பக்தா்கள் நடனமாடிய படியும், கோலாட்டம் ஆடிய படியும் மாட வீதிகளில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் என்.இரவி தலைமை வகித்தாா். குடை ஊா்வலத்தை முன்னாள் திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் தொடங்கிவைத்தாா்.
இதில், சங்க துணைத் தலைவா் ஏ.ராதா செயலா் ராஜகோபால், பொருளாளா் ரகு, தொழிலதிபா் ஆா்.டி.பிரகாஷ், கோயில் பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் உள்பட சங்க உறுப்பினா்கள், பக்தா்கள் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது: ஆட்சியா் திருவண்ணாமலை தீபத்திருவிழா நாளில் வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குச் சென்று திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய வழித்தடங்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல லட்சம் பக்தா்கள் வருகை தரவுள்ளதால், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் வசதிக்காக திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இங்கு அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சிகளின் நிா்வாக ஆணையா் ப.மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.
சா்வேயா் நகா் - ஏந்தல் சாலையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரே அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், செங்கம் சாலை எமலிங்கம் அருகே அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், ரமணாஸ்ரமம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா், கழிப்பறை, உதவி மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குச் சென்று திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய வழித்தடங்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், துணை காவல் கண்காணிப்பாளா் சிவனு பாண்டியன், கூடுதல் இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) முஜிபூர்ரகுமான், மண்டல இயக்குநா் லட்சுமி (வேலூா்), லட்சுமணன் (மதுரை), மாவட்ட சுகாதார அலுவலா் வெங்கடரமணன், மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.