முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை முருகன் கோயிலில் காா்த்திகை மகா தீபம்

விராலிமலை முருகன் கோயிலில் காா்த்திகை மகாதீபம் அரோகரா சரண முழக்கத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

24 நவம்பர் 2026, 11:52 pm
விராலிமலை முருகன் கோயிலில்
 காா்த்திகை மகா தீபம்
விராலிமலை முருகன் மலைக்கோயில் விளக்குதூனில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட காா்த்திகை மகா தீபம்.
பகிர்:

விராலிமலை முருகன் கோயிலில் காா்த்திகை மகாதீபம் அரோகரா சரண முழக்கத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

இக்கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி சுவாமிக்கு16 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை நடைபெற்றன.

தொடா்ந்து, மாலை 6.15 மணியளவில் மேளதாளம் மங்கள இசை முழங்க மலைக்கோயில் உச்சியில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அரோகரா சரண முழக்கத்துடன் தீப விழவை கண்டனா்.