வேலூர்

தன்வந்திரி பீடத்தில் காஞ்சி மகா பெரியவர் ஆராதனை

வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் காஞ்சி மகாபெரியவர் ஆராதனை விழா மற்றும் கால பைரவர் கோடி

DIN

வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் காஞ்சி மகாபெரியவர் ஆராதனை விழா மற்றும் கால பைரவர் கோடி ஜப ஹோமம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் தரும் 58 யாகங்கள் கோபூஜையுடன் கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கியது.
வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 6.00  மணிக்கு மங்கல இசையுடன் கோ பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை, வேத பாராயணம், விநாயகர்  தன்வந்திரி திருமஞ்சனம், மகா கணபதி ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம், ஆரோக்கியலக்ஷ்மி ஹோமம்,  நவக்கிரக ஹோமம், காலபைரவர் கோடி ஜப ஹோமம், காஞ்சி மகா பெரியவர் ஆராதனையுடன் காலபைரவர் கோடி ஜப ஹோமம் மற்றும் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் தரும் 58 யாகங்களின் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
இந்த யாகம் வரும் 3-ஆம் தேதி முதல் தினம் ஒரு யாகத்துடன்  மார்ச் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 58 நாள்களுக்கு 58 யாகங்கள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் தரும் யாகங்களாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற உள்ளது. 
பக்தர்கள் அனைவரும் தினசரி காலை முதல் மாலை வரை நடைபெறும் யாகத்தில் கலந்து கொண்டு திருவருளுடன் குருவருள் பெற வேண்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT