வேலூர்

இஸ்லாமிய மகளிர் உதவி மையம் திறப்பு

DIN

வாணியம்பாடி கோட்டை பகுதியில் இஸ்லாமிய மகளிர் உதவி மையம் திறப்பு விழா இஸ்லாமி பைதுல்மால் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் காகாசயீத் அஹமத் உமரி தலைமை வகித்தார். 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் படேல் முஹமத் யூசுஃப் முன்னிலை வகித்தார். 
வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் டி.முஹம்மத் இஸ்மாயில் அனைவரையும் 
வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பிக்கா அமைப்புச் செயலர் காலித் சைபுல்லா ரஹமானி கலந்து கொண்டு இஸ்லாமிய மகளிர் உதவி மையம் சார்பில் மகிழ்ச்சியான குடும்பத்துக்கான ஆலோசனை மைய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இதில் வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா நகர தலைவர் பசி அகரம், அலீம் பாஷா, வாணியம்பாடி தன்சீம் ஜமாத் பொதுச் செயலர் அஸ்மத் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பாஹீரா அதீக் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT