வேலூர்

திருப்பத்தூர் நகராட்சியில் குப்பை அள்ள ரூ. 40 லட்சத்தில் பேட்டரி வாகனங்கள்

DIN

திருப்பத்தூர் நகராட்சிக்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 7 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பவுச நகரில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகின்றன. இப்பணிகளுக்காக குப்பைகளை சேகரிக்க மின்சாரத்தில் இயங்கும் 20 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் இரா.சந்திரா கூறியது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் செலவில் நகராட்சிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் நகராட்சிக்கு உள்பட்ட வீடுகளுக்குச் சென்று குப்பைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அப்போது, பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தரவேண்டும்.
பெரியார் நகர், நகராட்சி வளாகம், கலைஞர் நகர், அவ்வை நகர் ஆகிய இடங்களில் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம் ரூ. 2 கோடி செலவில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT