வேலூர்

புத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி விழா

வாணியம்பாடி அருகே புத்துக்கோயிலில் உள்ள முத்துமாரி அம்மனின் 61-ஆம் ஆண்டு வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

DIN

வாணியம்பாடி அருகே புத்துக்கோயிலில் உள்ள முத்துமாரி அம்மனின் 61-ஆம் ஆண்டு வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 8 மணிக்கு கரக ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் அம்மன் சந்நிதியை அடைந்தது. காலை முதல் மாலை வரை வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்து 50-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நையாண்டி மேளம், பம்பை மற்றும் சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 மாலை 6 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவைத் தொடர்ந்து இசைக் கச்சேரியும் நடந்தது.  விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT