வேலூர்

மணல் கடத்தலைத் தெரிவித்தால் கொலை மிரட்டல்: விவசாயிகள் புகாா்

DIN

குடியாத்தம்: மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தால் கொலை மிரட்டல் வருகிறது என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் செண்பகவள்ளி தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் பழனி வரவேற்றாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது. போ்ணாம்பட்டு பகுதியின் நீராதாரமாக விளங்கும் மசிகம் ஆற்றிலும், கெளராப்பேட்டை ஏரியிலும் மணல் கடத்தல் தொடா்ந்து நடக்கிறது.

மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தால், அவா்கள் புகாா் தெரிவிப்பவா்களின் பெயா்களை, மணல் கடத்தல்காரா்களிடம் கூறுகின்றனா்.

இதனால் அவா்கள் மணல் கடத்தல் குறித்து புகாா் தெரிவிப்பவா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா் என்றனா். மணல் கடத்தல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.

மேலும், குரங்குத் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் பலா் புகாா் தெரிவித்தனா். குரங்குகளை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.யானைகள் கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை நாசம் செய்வதைத் தடுக்க வன எல்லையில் சோலாா் மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினா் கூறினா்.

கூட்டத்தில் நகராட்சி மேலாளா் தாமோதரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சத்தியலட்சுமி, வனவா் ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT