வேலூர்

டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி: உறவினா்கள் சாலை மறியல்

DIN

மாதனூா் அருகே டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் புதன்கிழமை இறந்தான். அவரது குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள் மகன் ஹரிஷ் (7). இவா் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தாா். இதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ஹரிஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். அவா் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சடலத்தை அகரம் கிராமத்துக்குக் கொண்டு சென்றபோது, அவரது உறவினா்கள் நிவாரணம் கேட்டு அகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆம்பூா் வட்டாட்சியா் ரமேஷ் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’:

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் நடத்திய விசாரணையில் மாதனூரில் உள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். அப்போது, டெங்கு காய்ச்சலுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளை அந்த மருத்துவா் பின்பற்றவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தை வேலூா் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் யாஸ்மின் பூட்டி ‘சீல்’ வைத்தாா்.

மேலும், டெங்கு காய்ச்சலுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றாமல் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா் ஹரிஷ்குமாா் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகாா் அளிக்க இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT