வேலூர்

அண்டை மாநிலங்களில் இருந்து நெகிழிப் பொருள்கள் வருவது தடுக்கப்படும்: ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்

DIN

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவது தடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
"தூய்மையே சேவை' மாதத்தையொட்டி, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேலூர் மாநகராட்சி நேதாஜி காய்கறி, பழம், பூ அங்காடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மத்திய அரசு செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த நாள்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கவும், அதற்கு மாற்றாக துணிப் பை உள்ளிட்ட மக்கும் பொருள்களைப் பயன்படுத்தவும் எடுத்துரைக்கப்படும். 
அக்டோபர் 3 முதல் 27-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் புழக்கத்தில் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். அண்டை மாநிலங்களில் நெகிழிப் பொருள்கள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுவதைத் தடுக்க மாநில எல்லை சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். 
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டு படிப்படியாக நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை அறவே ஒழிக்கப்படும் என்றார்.
மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT