வேலூர்

குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல்: வேலூா் ஆட்சியா் சண்முகசுந்தரம் தகவல்

வேலூா் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ. 58-க்கு துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ. 58-க்கு துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருமானத்தைப் பெருக்கவும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டின் (2019-20) காரீப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ. 58-க்கு துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதற்கு வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முதன்மைக் கொள்முதல் மையமாக செயல்படும். இவற்றுடன் மாவட்டத்திலுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் தேதி வரை இந்த கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும்.

நடப்பு பருவத்தில் 450 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விளை பொருள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0416 -2220713, 0416 -2220083, 97892 99174 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT