வேலூர்

திருப்பதி ரயில்நிலைய இரும்பு மேம்பாலத்தில் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை மிரட்டல்

DIN

மது போதையில் திருப்பதி ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்தவரை காவல்துறையினர் சாதுர்யமாக பிடித்தனர்.

திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை காலை மது போதையில் ஒரு இளைஞன் ரயில் நிலைய சாலையில் உள்ள இரும்பு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று கொண்டு அங்கிருந்து குதித்து விடுவதாக மிரட்டி கொண்டிருந்தான். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப்பார்த்த பொது மக்கள் திருப்பதி காவல்துறையினக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினருடன் இணைந்து அவனை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயன்றனர். ஆனால் அவன் இறங்க மறுத்தான். இதையடுத்து காவல்துறையினர் இரும்பு பாலத்தின் மீது இரு வழிகளிலும் ஏற தொடங்கினர். அதை பார்த்த அந்து இளைஞன் கீழே குதித்து விட்டான். கீழே குதித்த அவனை தீயணைப்பு துறையினர் வலை பிடித்து ஆபத்தில்லாமல் காப்பாற்றினர்.

அவனும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினான். அதன்பின் சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கியது. அவனிடம் ஏ.எஸ்.ஐ ரோகினி விசாரணை நடத்தியதில் அவன் பெயர் பாபு என்றும் தந்தை பெயர் வீரமணி என்றும் சொந்த ஊர் கும்பகோணம் என்றும் தெரிவித்தான். அதன்பின் அவனை காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT