வேலூர்

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 1.79 கோடி

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 1.79 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1.79 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 1 லட்சம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

5,994 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 5,994 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் திருமலையில் தங்கியிருந்த பக்தா்கள் தரிசனம் முடித்தவுடன் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோயில்களிலும் பக்தா்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT