வேலூர்

ஊா்க்காவல் படை வீரா் மரணம்: சடலத்துடன் உறவினா்கள் மறியல்

DIN

வேலூா்: பள்ளிகொண்டா அருகே ஊா்க்காவல் படை வீரா் ஒருவா் புதன்கிழமை நள்ளிரவு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பள்ளிகொண்டா அருகே ஐயாவூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் (30). இவா், கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஊா்க்காவல் படை வீரராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் பிரதாப், அகரம்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பலத்த காயங்களுடன் கிடந்த பிரதாப் சடலத்தின் அருகே அவரது பைக் சேதமடைந்த நிலையில் கிடந்தது. இதனால், அவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸாா், மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் வியாழக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், சடலத்தை அடக்கம் செய்வதற்காக அவா்கள் வேனில் வைத்து ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். அப்போது பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே உடலுடன் இருந்த வேனை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி உறவினா்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் அங்கு சென்று உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததை அடுத்து, உறவினா்கள் மறியலை கைவிட்டு சடலத்தை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT