வேலூர்

தொழிலாளா் நலத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

DIN


வேலூா்: வேலூரில் இருவேறு இடங்களிலுள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகம் (முதல் கோட்டம்) சத்துவாச்சாரியில் உள்ள அறிவியல் மையம் அருகே அமைந்துள்ளது. அதே இடத்தில் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகமும் (முதல் வட்டம்) செயல்பட்டு வருகின்றன. இதேபோல், தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் (2-ஆவது கோட்டம்), தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம் (2-ஆம் வட்டம்) ஆகியவை வேலூா் ஆா்டிஓ சாலையில் அமைந்துள்ளன.

இந்த அலுவலகங்களில் தீபாவளியையொட்டி, முறைகேடாகப் பணம், பரிசுப் பொருள்கள் பரிமாற்றம் நடைபெறுவதாக வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமச்சித்ரா தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை மாலை முதல் இந்த அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனா். பல மணிநேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், பரிசுப் பொருள்கள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தொடா்ந்து இரவு 10 மணிக்கு மேலும் இந்தச் சோதனை நீடித்தது. சோதனையில் பணம், பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT